மகான் ஒருவர் காட்டில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் அக்கரைக்குப் போக நினைத்தார். ஆற்றோரம் ஒரு படகு இருந்தது. அதில் படகோட்டியும் இருந்தான். மகான் படகில் ஏறினார். ஆறு மிக அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டி, மகானிடம், ""ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்?. அவரை எனக்குக் காட்ட முடியுமா?'' என்று கேட்டான். மகான் அவனைப் பார்த்துப் புன்னகையுடன், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் அப்பா!. அவர், இரக்கம், தயை, கருணை, அன்பு முதலிய குணங்களில் இருக்கிறார். இதோ!. என் எதிரே இருக்கும் உன்னிடம் கூட நான் கடவுளைப் பார்க்கிறேன்!என்றார்.
படகோட்டிக்குப் புரியவில்லை. விழித்தான். அவனது குழப்பமடைந்த முகத்தைப் பார்த்த மகான், நேரம் வரும்போது புரியும்! என்றார். படகு ஆழமான பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது நல்ல மழை! திடீரென காற்றும் பலமாக வீசியது. படகு ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கவிழ்ந்தே விட்டது!. மகானுக்கு நீச்சல் தெரியாது! அவர் படகிலிருந்து தவறி நீருக்குள் முழுகினார்!. படகோட்டிக்குப் பதைபதைப்பாகிவிட்டது! உடனே அவன் நீரில் பாய்ந்தான். படகோட்டிக்கு நீச்சலில் திறமை அதிகம்! அனுபவமும் அதிகம்!. மகானைக் காப்பாற்றி பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டான். மகான் கண்விழித்துப் பார்த்துவிட்டு, படகோட்டியிடம், மகனே!. இப்போது புரிகிறதா?. உன் மனதில், நான் எப்படிப் போனாலும் பரவாயில்லை'. என நினைக்காமல், இரக்கத்தினால் நீரில் குதித்து என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்!. அந்த இரக்க குணமே கடவுள்!. பிறர் துன்பத்தைச் சகியாதவனிடத்திலும், இரக்கமுள்ள இதயங்களிலும், உயிர்களிடம் அன்பு கொண்டவர்களிடத்திலும் கடவுள் வசிக்கிறார். உன்னுள் இருக்கும் இரக்க சிந்தனையைத்தான் நாம் கடவுள் என்கிறோம்!. என்றார். இரக்கமுள்ள இதயமே கடவுளின் இருப்பிடம்!
தெய்வீக ரகசியங்கள் :
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி ) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும். அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
சில ஹோமங்களும் அதன் பயன்களும்:
1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம்.
3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.
அபிஷேக பலன்கள்:
1. அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
2.நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.
3.பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.
4.தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்.
5.பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.
6.கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்.
7.மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.
8.தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.
9.புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.
10.இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.
11. உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
12.பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.
13.கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர ப்ராப்தி கிட்டும்.
14. ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான தாரித்ரியம் நசிக்கும்.
15.ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப கிடைக்கும்.
16.வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.
17. அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.
18.திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் உண்டாகும்.
19. கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவர்.
20.நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி கிட்டும்.
21.கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.
22. நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம், கோவ்ருத்தி கிட்டும்.
23. மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
குபேர செல்வமும் சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்.
இம் மந்திரத்தினை காலை மாலை வேளையில் பூஜையில் ஜெபம் செய்து வர அஷ்ட ஐஸ்வர்யமும், லட்சுமி கடாட்சமும், புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள்.
1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்ய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தனதானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
4. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
5. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
8. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
9. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
11. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
12. ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
13. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
14. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
15. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி குபேர தேவாய நமஹ!
16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய குபேர தேவாய நமஹ!
இம் மந்திரத்தினை காலை மாலை வேளையில் பூஜையில் ஜெபம் செய்து வர அஷ்ட ஐஸ்வர்யமும், லட்சுமி கடாட்சமும், புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள்.