சிறுதானியத்
தாவரங்களான கம்பு, கேழ்வரகு(ராகி), சோளம், வர
கு, திணை, சாமை, குதிரைவாலி ஆகிய புன் செய்
பயிர் வகைகளாகும்.
கம்பு :
கம்பு
அதிக வறட்சியிலும் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.மானவாரியாகவும் நீர்ப்பாசனத்திலும்
வளரக்கூடிய பயிர்.அனைத்து வகையான மண்ணிலும் விளையக்கூடியதாகும்.அதிகமாக பயிரிடும்
சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை வகிக்கிறது.
ராகி இட்லி
தேவையானைவை :
ராகி
மாவு – 4 கப், அரைத்த உளுந்து மாவு – ஒரு கப், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு
கப் ராகி மாவை ஊற வைத்து அரைத்த உளுந்த மாவு, உப்பு சேர்த்துக் கலக்கி, 10 மணி
நேரம் புளிக்கவிட வேண்டும். பிறகு, நன்கு கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில்
10 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் ராகி இட்லி தயார். சட்னியுடன் பரிமாறவும்.
ராகி ஆப்பிள் ஸ்மூத்தி
தேவையானவை :
ராகி
மாவு – அரை கப், ஆப்பிள் – ஒன்று, பால் – அரை கப், தயிர், பனஞ் சர்க்கரை, தேன் –
தலா 2 மேஜைக்கரண்டி.
செய்முறை :
ராகி
மாவை 2 கப் நீரில் கரைத்து, கொதிக்கவிட்டு கெட்டியாகக் கிளற வேண்டும். ஆறியதும்
மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், பால், தயிர், பனஞ் சர்க்கரை, தேன், ராகிக் கூழ்
சேர்த்து அடித்துக் கலக்கி, பரிமாறவும்.
தினை பெசரெட்
தேவையானைவை :
தினை –
ஒரு கப், பச்சைப் பயறு – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, சீரகம், சோம்பு, மிளகு –
தலா கால் தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப,எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை :
தினை, பச்சைப் பயறை 4 மணி நேரம் ஊறவைக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மெல்லிய தோசையாக ஊற்றி, விருப்பப்பட்டால் மேலே கேரட் துருவல் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி மூடிவிடவும். வெந்ததும் எடுத்து, இஞ்சி சட்னியுடன் பரிமாறவும்.
தினைப் பருத்திப்பால்
தேவையானவை :
பருத்திவிதை
– 100 கிராம், வெல்லம் – 150 கிராம், தினை மாவு, சுக்குப்பொடி – தலா 2
மேஜைக்கரண்டி, தேங்காய்ப்பால் – 2 கப், ஏலப்பொடி – கால் தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் – கால் கப்.